img
img

கும்பல் தாக்குதல் ரத்தத்தை கொதிக்க வைக்கிறது: பிரியங்கா காந்தி ஆவேசம்
ஞாயிறு 02 ஜூலை 2017 15:04:25

img

புதுடெல்லி, இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆவதையொட்டி, டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் நே‌ஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சார்பில் நினைவு சிறப்பு பதிப்பு வெளியிடப்பட்டது.இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்.பி.க்கள், முன்னாள் மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சமுதாயம் பிற்போக்கான மற்றும் இருண்ட பாதையை நோக்கி செல்லாமல் தடுத்து நிறுத்த மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மக்களின் கண்ணியம், உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க ஊடகங்கள் எப்போதும் விழிப்புடன் செயல்படவேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார். பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நாட்டில் ஆங்காங்கே சிலர் நடத்திய தாக்குதல்களை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் அவர் இவ்வாறு பேசியதாக தெரிகிறது. பசு பாதுகாவலர்கள் என தங்களை அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் சம்பவமானது அதிகரித்து காணப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடந்த சமீபத்திய படுகொலைகளை கண்டித்து பேசினார்.கும்பல் தாக்குதல் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா, இது என்னை மிகவும் கோபம் அடைய செய்து உள்ளது, தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்களில் இதுபோன்றவற்றை பார்க்கையில் என்னுடைய ரத்தத்தை கொதிக்க வைக்கிறது என கூறிஉள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img