கறுப்புப் பணம் மூலம் நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சார்டர்ட் அக்கவுன்டன்ட் நிறுவன விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு ஜிஎஸ்டி குறித்தும், கறுப்புப்பண விவகாரம் குறித் தும் பேசினார். விழாவில் மோடி பேசுகையில், ‘நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரிக்கு ஆதரவு அளித்தமைக்கு அனைவருக்கும் நன்றி. நாட்டை ஊழலிலிருந்து மீட்டு முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்கிறோம். அதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக மத்திய அர சால் பணமதிப்பு நீக்க நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. தற்போது, நாட்டை முற்றிலும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டியே ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார். மேலும், கறுப்புப்பணம், ஊழல் குறித்து பேசுகையில், ‘பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் கறுப்புப்பணம் குறைந்துவிட்டது. இதனால், சுவிஸ் வங் கியில் பதுக்கப்பட்டிருந்த கறுப்புப்பணம் குறைந்துள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி மூலம் இனி யாராலும் வரி ஏய்ப்பு செய்ய முடி யாது. வரி ஏய்ப்பு செய்து அரசை ஏமாற்றி நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது’ என ஆவேசமாகப் பேசினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்