முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை மீண்டு துவக்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சியால் நடத்தப் பட்ட இப்பத்திரிகையின் மறு தொடக்கவிழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இவ்விழாவிற்கு தலைமையேற்றார். இவ் விழாவில் மத்திய அரசை பெயர் குறிப்பிடாமல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாகத் தாக்கி பேசினார். விழாவில் சோனியா காந்தி பேசியதாவது, ‘நாட்டில் சகிப்புத் தன்மைக்கு எதிரான கேள்விகளை தீய எண்ணங்கள் கொண்ட சில சக்திகள் எழுப்பி விடுகின்றன. மக்கள் எதை சாப்பிடவேண்டும், என்ன செய்யவேண்டும், யாரை விரும்ப வேண்டும் என்பது முதல் அத்தனைக்கும் கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டு வருகின்றன. மக்கள் தங்கள் எண்ணங்களையும், விருப்பங்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘நாட்டில் நடக்கும் தவறான ஆட்சிக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். இல்லையேல் எல்லாவற்றிருக்கும் நம் அமை தியே சம்மதம் தெரிவித்தது போல் ஆகிவிடும்’ என ஆக்ரோஷமாகப் பேசினார். இவ்விழாவில் சோனியா காந்தியுடன் அவரது மகள் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டு நாட்டின் நிலை குறித்து பேசினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்