உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோளை தயாரித்த மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகின் எடை குறைந்த 'கலாம் சாட்' என்ற செயற்கைக்கோளை கண்டுபிடித்து, அசரடித்தனர் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பின் மாணவர்கள். இந்த 'கலாம்சாட்' செயற்கைக்கோளை உருவாக முக்கிய காரணமாக இருந்தது, ரிஃபாத் ஷாரூக் என்ற தமிழக மாணவர். கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்த 18 வயது இளைஞரான ரிஃபாத், இதற்காக பெரும் பாராட்டுகளையும் பெற்றார். 'நாசா' வருடந்தோறும் நடத்தும் 'க்யூப்ஸ் இன் ஸ்பேஸ்' போட்டிக்காக, ஏழு இளைஞர்கள் சேர்ந்து இந்த சிறிய செயற்கைக்கோளை கண்டுபிடித்தனர். தமிழக அரசு சார்பில் ரிஃபாத்துக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், ரிஃபாத் ஷாரூக்கிற்கு நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், 'கலாம்சாட்' செயற்கைக்கோள் உரு வாக காரணமாக இருந்த 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்