ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த 19 வயது பெண், இந்தியாவின் சார்பாக உலகத் துப்பாக்கிச் சுடும் போட்டிக்குத் தேர்வாகியிருப்பது தமிழகத் துக்கே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவிலைச் சேர்ந்தவர் நிவேதா. இவர் பெருந்துறை கொங்கு இன்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறார். துப்பாக்கிச் சுடுவதில் ஆர்வம் உடைய இவர், தன்னுடைய 12வது வயதில் கோவை ரைபிள் கிளப் உறுப்பினர் ஆனார். அன்று முதல் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த 2010 முதல் ஏர் பிஸ்டல், ஸ்போர்ட்ஸ் பிஸ்டல், ஷாட் கன் போன்ற பிரிவுகளில் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கிக் குவித்துள்ளார். கடந்த 2015-ல் கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற தேசிய துப்பாக்கிச்சுடும் போட்டியில் கலந்துகொண்டு தங்கமும் வெண்கலமும் பெற்றுள்ளார். இதுவரை தேசிய அளவில் 6 தங்கமும் 4 வெள்ளியும் 4 வெண்கலமும் பெற்றுள்ளார். சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எஃப்) சார் பில் வரும் ஆகஸ்ட் மாதம் 15 முதல் 22-ம் தேதி வரை இத்தாலியில் ப்ரபெட்டோ நகரில் உலகக் கோப்பை போட்டி நடக்கிறது. அதையடுத்து ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 11 வரை ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதற்கான தேர்வு கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்றது. அதில் பெருந்துறையைச் சேர்ந்த நிவேதா வெற்றிபெற்று இந்தியாவின் சார்பில் உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகி இருக்கிறார். புன்னகையோடு பேசும் நிவேதா, ''வரும் 2020 டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியில் கலந்துகொண்டு தங்கம் வெல்ல வேண்டும் என்பதே என் லட்சியம்'' என்கிறார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்