* நன்மை செய்தவருக்கு திரும்பவும் நன்மையே செய்வது உலக வழக்கம் தான். இதில் ஒன்றும் புதுமை இல்லை. ஆனால், தீமை செய்தவருக்கும் நன்மை செய்வது தான் உத்தமர்களின் செயலாகும். * சகதி நிறைந்த குளத்தில் நிமிர்ந்து நிற்கும் தாமரை மலர் போலவும், நீரினால் பாதிக்கப்படாமல் உயரவே பறந்து செல்லும் கடல்பறவை போலவும் உலகவாழ்வில் இருந்து கொண்டே கடவுளை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள். * மனதின் மாசு பொறாமை. நாக்கின் மாசு பொய் பேசுதல். கண்ணின் மாசு பிறர் பொருளை விரும்புதல். செவியின் மாசு பழிச்சொற்களைக் கேட்டல் இந்நான்கையும் செய்பவன் கற்றறிந்த அறிஞனாக இருந்தாலும் முடிவில் நரகத்திற்கே செல்வான். * பொறுமையிலும் சிறந்த தவம் இல்லை. திருப்தி கொள்வதிலும் உயர்ந்த இன்பம் வேறில்லை. ஆசையைக் காட்டிலும் வேறொரு தீமை இல்லை. மன்னிப்பதைக் காட்டிலும் ஆற்றல் மிக்க ஆயுதம் வேறொன்று இல்லை.
எல்லா உயிர்களிடமும் அன்புடன் நேசக்கரம் நீட்டுங்கள். ஒழுக்கம் என்னும்
மேலும்நான்கிருந்தால் அறிஞனுக்கும் நரகம் உறுதி * நற்செயல் என்னும் ஏர்முனையால்
மேலும்தீபாவளியை ஒட்டி புனித நதியான கங்கையில் ஸ்நானம் செய்தால் பாவம் தீர்ந்து
மேலும்