தேசிய ஆவணக் காப்பகத்தின் 125 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, புதிய பத்து ரூபாய் நாணயங்களை அறிமுகப்படுத்தவிருப்பதாக ரிசர்வ் வங்கி அறி வித்துள்ளது. இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் 125-ம் ஆண்டை நினைவுகூரும் வகையில் புதிய 10 ரூபாய் நாணயங்களை வெளியிட முடிவு செய்துள்ளதாகப் பத் திரிகைத் தகவல் அலுவலகம்அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய நாணயத்தின் மத்தியில் சிங்க முகத்துடன் கூடிய அசோகர் தூணில் ‘சத்யமேவ ஜெயதே’ என்ற வாசகம் இந்தி மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் மறுபக்கம் தேசிய ஆவணக் காப்பகத்தின் கட்டட உருவம் மத்தியிலும், அதன் கீழே ‘125’ ஆண்டு என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. நாண யத்தின் மேல் உச்சியில் ‘தேசிய ஆவணக் காப்பகம்’ என்றும் தேவநாகரி மொழியிலும், கீழ்ப்புறத்தில் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது. 125 ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில் ‘1891’ மற்றும் ‘2016’ என்ற ஆண்டு விவரமும் பொறிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பத்து ரூபாய் நாணயமும் புதிதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் நாணயமும் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்