கதிராமங்கலம் கிராமத்தில் உள்ள எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்திலிருந்து பல ஆயிரம் லிட்டர் கச்சா எண்ணெய் வெளியேறிய நிலை யில், அதில் தீப்பிடித்து இருந்தால் என்ன ஆயிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் இருந்து குத் தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கச்சா எண்ணெய் கொண்டுசெல்லும் குழாய்களில் பெரும் உடைப்பு ஏற்பட்டு மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் வெளியேறியிருக்கிறது. இதனால் அச்சமடைந்து பாதுகாப்புக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத் தியது கண்டிக்கத்தக்கது. கதிராமங்கலத்தில் பூமிக்கு அடியில் எண்ணெய் வளம் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு 2000 வது ஆண்டிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு, குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதற்காக கதிராமங்கலத்தில் மொத்தம் 8 எண்ணெய்க் கிண றுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து எண்ணெய் எடுத்துச் செல்வதற்காகப் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த குழாயில் துர்க்கையம்மன் கோயில் அருகில் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. குழாயிலிருந்து வெளியேறிய எண்ணெய் ஆறாக பெருக்கெடுத்து ஓடியதால் அச்சமடைந்த பொதுமக்கள் துர்க்கையம்மன் கோயில் அருகில் கூடி போராட் டம் நடத்தியுள்ளனர். ஓ.என்.ஜி.சி நிறுவனம் கதிராமங்கலத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றும், அதுகுறித்து பேசுவதற்கு மாவட்ட ஆட்சியர் கதி ராமங்கலம் வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். 8 மணி நேரத்துக்கும் மேலாகப் போராட்டம் நீடித்த நிலையில், திடீரென அவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இதில் ஏராளமான மக்கள் காயமடைந்துள்ளனர். கதிராமங்கலம் கிராமத்தில் உலகத்தரம் வாய்ந்த குழாய்கள் பதிக்கப்பட்டு, அதன் மூலம்தான் கச்சா எண்ணெய் கொண்டுசெல்லப்படுவதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், கச்சா எண்ணெய்க் குழாய்கள் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் வெடித்து சிதறியிருக்கின்றன. உடைப்பு ஏற்பட்ட இடத்திலிருந்து பல ஆயிரம் லிட்டர் கச்சா எண்ணெய் வெளியேறிய நிலையில், அதில் தீப்பிடித்து இருந்தால் என்ன ஆயிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட முன்னேறிய நாடுகளில் மக்கள் வசிக்காத பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய்க் குழாய்கள் வெடித் ததால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டது உலகறிந்த வரலாறு ஆகும். இதைக் கருத்தில்கொண்டு வளர்ந்த நாடுகளில்கூட மக்கள் வாழும் பகுதி களில் கச்சா எண்ணெய்க் குழாய்கள் அமைப்பதைப் பெரும்பாலும் அந்த நாட்டு அரசுகள் தவிர்த்து வருகின்றன. வளர்ந்த நாடுகளிலேயே கச்சா எண்ணெய்க் குழாய்கள் உடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க தொழில்நுட்பம் இல்லாத நிலையில், எந்த வசதியும் இல்லாத, நெருக்கமாக மக்கள் வாழும் கதிராமங்கலம் மற்றும் அதையொட்டிய கிராமங்களில் கச்சா எண்ணெய்க் குழாய்கள் புதைக்கப்பட்டிருப்பது எந்த வகை யிலும் பாதுகாப்பானது அல்ல. எரிமலை மீது வாழ்வது எந்த அளவுக்கு ஆபத்தானதோ, அதைவிட ஆபத்தான சூழலில்தான் கதிராமங்கலம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்கின்றனர். கச்சா எண்ணெய்க் குழாய்கள் பதிக்கப்பட்டதால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக் கிறது. இதனால் அங்கு எடுக்கப்படும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீர் மாசு கலந்து கறுப்பாகவும் கசப்பாகவும் வெளியேறுகிறது. கசப்பு சுவை யும் நச்சுத்தன்மையும் கொண்ட குடிநீரால் பலவிதமான நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் மேலாக மக்களின் வாழ்வாதா ரமாகத் திகழும் வேளாண்மை விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை சரி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாகத் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வதற்காகப் போராடிய மக்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தியிருப்பதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. தங்கள் பாதுகாப்புக்காக மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், தேவையின்றி போராட் டக் குழுத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோரைக் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. அவர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். மக்களின் நலனைப் புறக்கணித்து விட்டு செயல்படுத்தப்படும் எந்தத் திட்டமாக இருந்தாலும், அது கண்களை விற்று சித்திரம் வாங்கும் செயலாகவே அமையும். எனவே, கதிராமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறுகளை மூடிவிட்டு, அங்கிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண் டும். பொதுமக்களைத் தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கதிராமங்கலம் பகுதியிலிருந்து காவல்துறையினர் அனை வரையும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால் நானும் கதிராமங்கலம் கிராமத்தில் முகாமிட்டு மக்களுடன் இணைந்து போராடுவேன்" என்று எச்சரித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்