போராடிய மக்களைச் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வீடியோ கேரளாவில் வைரலாகப் பரவி வருகிறது. கேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பூஞ்சார் என்ற சட்ட மன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், பி.சி.ஜார்ஜ். அவரது தொகு தியில் முடக்காயம் என்ற எஸ்டேட் உள்ளது. அதன் அருகிலுள்ள ஆற்றின் கரையோரத்தில் 52 ஏழைக் குடும்பத்தினர் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். நீண்ட ஆண்டுகளாக அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் மக்களை அங்கிருந்து விரட்டுவதற்காக எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலாளர்களை நிர்வாகம் பயன்படுத்தி உள்ளது. இரவு நேரங்களில் எஸ்டேட் தொழிலாளர்கள், குடியிருப்புப் பகுதிக்கு வந்து ஆபாசமாக பேசுவதுடன் வீடுகளின் மீது கல்வீச்சுச் சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட தொகுதியின் எம்.எல்.ஏ-வான பி.சி.ஜார்ஜ் சம்பவ இடத் துக்குச் சென்றுள்ளார். அரசு நிலத்தில் குடியிருப்பவர்களைச் சந்தித்து அவர் பேசிக் கொண்டிருந்தார். அவர் அங்கு வந்ததை அறிந்த எஸ்டேட் ஊழியர்கள் அந்த இடத்துக்குத் திரண்டு வந்தனர். அவர்கள், பி.சி.ஜார்ஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால திருப்தியடைந்த அவர், காரில் ஏறிச் செல்ல முயற்சித்தார். ஆனால், அவரை விரட்டியபடியே வந்த எஸ்டேட் தொழிலாளர்கள், அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் திருப்தி அடைந்த அவர், தன்னிடமிருந்த துப்பாக்கியைத் தூக்கிக் காட்டினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ’சுடுங்கள். என்னைச் சுடுங்கள்’ என்று அவருக்கு நெஞ்சைக் காட்டினார். அதற்கு பதிலளித்த பி.சி.ஜார்ஜ், ’நீங்கள் என்னை அடித்து உதைப்பதாகச் சொன்னீர்கள் அல்லவா? அடி யுங்கள் பார்க்கலாம்..’ என விவாதம் செய்தார். தொழிலாளர்கள் மீது சட்டமன்ற உறுப்பினரே துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் சர்ச்சை யைக் கிளப்பி உள்ளது. இந்தச் சம்பவம் பற்றிப் பேசிய பி.சி.ஜார்ஜ் எம்.எல்.ஏ., ’’அந்த ஏழை மக்களை அங்கிருந்து விரட்ட எஸ்டேட் நிர்வாகம் முயன்றது. அவர்களுக்கு உதவு வதற்காகவே நான் அங்கே சென்றேன். இரவில் கல்வீசும் நபர்கள் மீது ஆசிட் வீசுமாறு பாதிக்கப்பட்ட பெண்களிடம் சொன்னேன். நான் வந்ததை அறிந்து எஸ்டேட் நிர்வாகம் தூண்டி விடப்பட்ட சிலர் என்னைத் தாக்குவதற்கு வந்தார்கள். அதனால்தான் நான் துப்பாக்கியை எடுக்க வேண்டிய சூழ்நிலை உரு வாகி விட்டது. நான் தற்காப்புக்காகத் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி பெற்று உள்ளேன். என்னிடம் துப்பாக்கி இருந்ததாலே நான் தாக்கப்படாமல் திரும்ப முடிந்தது” என்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பிலும் புகார் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. கேரளாவில் இந்த வீடியோதான் இப்போதைய வைரல் விவகாரம்!
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்