புதுச்சேரி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஒரு மகாராணியைப் போல் நடந்துகொள்கிறார் என அமைச்சர் கமலக் கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கோப்புகளில் கையெழுத்திடாமல் இருப்பதால் வளர்ச்சிப் பணிகள் முடங்கி இருக்கிறது என முதல்வர் நாராயணசாமி உள்பட அனைத்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கிரண்பேடி மீது குற்றச்சாட்டு கூறினர். ஆனால் அதை எதையும் கிரண்பேடி கண்டு கொள்ளவில்லை. பதிலுக்கு அவர், அரசின் அனைத்து விஷயங்களிலும் ஊழல், முறைகேடு என குற்றம்சாட்டினார். இந்நிலையில் இப்தார் விருந்தின் போது இனிமேல் முதல்வருடனும் அரசுடனும் சுமூகமாக இருக்க முயல்வேன் என கூறினார். இந்நிலையில், அமைச்சர் கமலக் கண்ணன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மன்னராட்சி நடைபெறும் நாட்டின் மகாராணி போல் நினைத்து செயல்படுகிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்