டெல்லி மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங் பொது இடத்தில் உள்ள ஒரு சுவற்றில் சிறு நீர் கழித்தமை தொடர்பான இரு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் திரும்பி நிற்க வேளாண் அமைச்சர் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பதைக் காட்டும் இந்த புகைப்படங்கள் பொதுமக்களிடையே பல்வேறு விமர்சனங்களை கிளப்பியிருக்கின்றன. மக்கள் பொது இடங்களை கழிப்பறையாக பயன்படுத்தக்கூடாது என ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.மக்களுக்கு விழிப்புணவை ஏற்படுத்த அதிக செலவில் விளம்பரங்களும் ஒளிப்பரப்படுகின்றன. ஆனால் மக்களுக்கு முன்மாதிரியானா ஒரு மத்திய அமைச்சர் இவ்வாறு நடந்துகொண்டமை சர்ச்சைக்குரிய ஒரு விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் கடுமையாக எதிர்க்கருத்துக்களை வௌியிட்டுள்ளனர் சமூக ஆர்வலர்கள். வேளாண் அமைச்சர் மண்ணில் யூரியா கலக்கிறார் எனவும், நரேந்திர மோடி உங்கள் அமைச்சர்களில் ஒருவரான ராதாமோகன் பொது இடத்தில் சிறுநீர் கழித்து ஸ்வச் பாரத் திட்டத்திற்கே ஒரு பெரிய எடுத்துக்காட்டை உருவாக்கியுள்ளார் எனவும் விமர்சனங்கள் கிளம்பின. மத்திய அமைச்சரே இப்படி நடந்துக்கொண்டால் பொதுமக்கள் என்ன செய்வார்கள், அமைச்சர் ராதாமோகன் சிங்கும் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர் கழிப்பறை பிரச்சனை ஏழை மக்களுக்கு மட்டும் அல்ல என்றும்,அரசாங்கம் கழிப்பறைகளை கட்ட எவ்வளவு செலவு செய்கிறது? அவருக்கு எப்படி ஒரு கழிப்பறை கிடைக்காமல் போனது? இது அவமானம் எனவும் கருத்துக்கள் வௌியாகியமை குறிப்பிடத் தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்