சென்னை "டியர் சென்னை, நீங்கள் தண்ணீருக்கு பிச்சை எடுத்தீர்கள், நாங்கள் கொடுத்தோம். நீங்கள் மின்சாரத்திற்கு பிச்சையெடுத்தீர்கள் நாங்கள் கொடுத்தோம். உங்கள் ஆட்கள் எங்கள் அழகான நகரை (பெங்களூர்) வந்து ஆக்கிரமித்துக்கொண்டு அசிங்கப்படுத்தினீர்கள், அதை அனுமதித் தோம். இப்போதும், பிளேஆப் நீங்கள் செல்ல எங்கள் கருணைதான் தேவைப்படுகிறது. நாங்கள் இப்படித்தான். நீங்கள் பிச்சையெடுப்பதும், நாங்கள் கொடுப்பதும் வழக்கம்" இவ்வாறு திமிர்த்தனமாக கூறியிருந்தவர்தான் இந்த தன்யா பாலகிருஷ்ணன். இது தமிழகத்தில் வைர லாகி தன்யாவிற்கு பெரும் எதிர்ப்பைக் கிளப்பிய விமர்சனமாகும். தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கூறி எதிர்ப்பை சம்பாதித்து, கோலிவுட்டைவிட்டு விலகிய நடிகை தன்யா பாலகிருஷ்ணன் மெதுவாக மீண்டும் தமிழ் திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். கன்னட திரையுலகில் அறிமுகமாகி பெயர் போட முடியாத நிலையில் தமிழ் பக்கம் கரை யொதுங்கியவர் தன்யா பாலகிருஷ்ணா. சூர்யா நடித்த 7ம் அறிவு திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர். பாராட்டும் பெற்றவர். 2012ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் தோல்வி அவசியப்பட்டது. பெங்களூர் அணி தோல்வியடைந்த நிலையில் சென்னை பிளேஆப் சுற்றுக்குள் சென்றது. இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த தன்யா பாலகிருஷ்ணன், வார்த்தைகளை மிக மோசமாக கொட்டியிருந்தார். அவர் தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கூறியிருந்தார். அந்த விமர்சனம்தான் மேலே குறிப்பிடப்பட்ட கடுமையான அந்த வார்த்தைகள். தன்யாவின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து கோலிவுட்டிலிருந்தே வெளியேறுவதாக அறிவித்தார் தன்யா. "நான் ஒப்புக்கொண்ட அனைத்து படங்களில் இருந்தும் விலகிக்கொள்கிறேன். திரும்பி வரமாட்டேன்" என்று கொந்தளித்தார் இந்த தன்யா பாலகிருஷ்ணன். இவரது கடுமையான விமர்சனங்கள் அப்போது இரு மாநிலங்கள் நடுவே பதற்றத்தை விதைத்தது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், இப்போது மீண்டும் தன்யா தமிழ் சினிமாவில் களம்புகுந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஸ்டார் நெட்வொர்க்கின் ஹாட்ஸ்டார் செயலி வாயிலாக வெளியான As I'm Suffering From Kadhal என்ற வெப்சீரிசில் இவர் நடித்துள்ளார். மாரி உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இந்த வெப்சீரிசை இயக்குகிறார். இதில், பலான வசனங்கள் பல பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கின்றது. தமிழர்களை இவ்வளவு கடுமையாக விமர்சித்த ஒருவரை மீண்டும் ஏற்று நடிப்பதற்கு வாய்ப்பளித்திருப்பது தமிழர்களின் மறதியா, அல்லது மன்னிக்கும் திறனா, இல்லை தமிழில் நடிப்பதற்கு ஆளே இல்லை என்பதால் மாற்று மாநிலத்தவர் நம்மை மிதித்தாலும் ஏற்று நடக்க வேண்டிய அவசியமா என்ற பல கேள்விகள் எழாமல் இல்லை. இவ்வாறு சினிமாவில் ஆரம்பிக்கும் இந்த நிலைதான் அரசியலுக்கும் வித்திட்டுச் செல்கின்றது என்று எடுத்துக் கொள்ளலாமா?
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்