img
img

ஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிபதி சரமாரி கேள்வி!
புதன் 28 ஜூன் 2017 16:50:39

img

ஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தவருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டிருந்தார். இரண்டு மாதங்களுக்கு மேல் மருத்துவமனையிலிருந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர், மருத்துவமனையில் சிகிச்சை யிலிருந்த காலத்தில் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. மேலும், அவர் சிகிச்சையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு ஏதும் வெளி யிடப்படவில்லை. எனவே, அவருடைய மரணம் தொடர்பாகத் தமிழக மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் அளிக்க என்ன காரணம். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தீர்களா என்று நீதிபதி கேள்வி எழுப்பியதோடு, இதுதொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்று மனுதாரருக்கு உத்தரவிட்டார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img