குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட் டுள்ளது. சென்னை மெரினாவில் தடையை மீறி நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியின்போது மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு முருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக் கப்பட்டனர். இதனிடையே, மே 29-ம் தேதி நான்குபேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஐஓசி அலுவலகம்மீது கல்வீசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் திருமுருகன், தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் ஆகியோரைக் காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கில் ஜூன் 14-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது சிறையில் தண்டனை பெற்றுவரும் திருமுருகன் காந்தி உள்பட மூவருக்கான நீதிமன்றக் காவல் ஜூலை மாதம் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்