சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர் அமல்படுத்தினார் என்ற அமைச்சர் வேலுமணியின் பதிலுக்கு, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி அதிரடியாகப் பதில் அளித்துள்ளார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா செப்டம்பர் 16-ம் தேதி தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இந்த விழா வைச் சிறப்பாக செய்துமுடித்திட மாவட்ட ஆட்சியர்கள் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இதனிடையே, எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், "இந் தியாவில் எந்த ஒரு மாநிலமும் நிறைவேற்றாத முதலமைச்சர் சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தினார் எம்.ஜி.ஆர். தனது ஆட்சிக்காலத்தில் மாண வர்களுக்கு இலவச சத்துணவுத் திட்டம், சாப்பிட உணவு கிடைக்கவில்லை என்பதற்காக எந்தக் குழந்தையும் பள்ளிக்கு வராமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காக, ஆரம்பப்பள்ளிக் குழந்தைகள் 2 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் மதியம் ஒருவேளை பள்ளிகளிலேயே சமைத்து உணவு வழங்கப்பட்டது. அதுமட்டுமன்றி, சத்துணவுக் கூடங்களில் உணவு சமைத்து பரிமாற ஆயா வேலையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அமர்த்தப்பட்டனர். அவர் கள் மாதம் ரூ.100 சம்பளம் பெறவும் வகை செய்யப்பட்டது. பெண்களின் வேலையில்லாத் திண்டாட்டமும் இதன் மூலம் ஓரளவுக்குக் குறைந்தது; குழந் தைகளின் பசியும் தீர்க்கப்பட்டது. இதற்காக ஆன செலவு ஆண்டுக்கு ரூ.200 கோடியாகும். மக்கள் மத்தியில் இத்திட்டம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு தனது ஃபேஸ்புக்கில் பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி, குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடங்கள் மட்டும் போதாது என்பதை உணர்ந்து, முதன்முதலாக மதிய உணவுத் திட்டத்தை மாநிலம்முழுவதும் அமல்படுத்தியவர் காமராஜர். எம்.ஜி.ஆர் அல்ல. பிறகு எம்.ஜி.ஆரால் இது சத்துணவுத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டு பள்ளி விடுமுறை நாள்களிலும் உணவு வழங்கப்பட்டது. காமராஜர் திட்டத்தை அடி யொற்றியே மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு இலவச மதிய உணவுத் திட்டத்தை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தியது. வரலாறு முக்கியம் அமைச்சரே!" என்று கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்