மும்பை, தமக்கு எதிரான விமர்சனங்கள் தொடர்பாக காலா படப்பிடிப்பில் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்ட ரஜினி காந்த், ’வினாச காலே விபரீத புத்தி’ என சாடியிருக்கிறார். ரஜினி சாடியது யாரை என்பது தொடர்பாக பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார். பாஜகவில் இணைவார் என பேராவலுடன் காத்திருந்தது பாஜக. ஆனால் அவரோ தனிக்கட்சி தொடங்குவதில் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். இது தொடர்பாக தீவிரமான ஆலோசனையும் நடத்தி வருகிறார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த பாஜக, சுப்பிரமணியன் சுவாமி மூலம் ரஜினியை விமர்சித்து வருகிறது. சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்தை 420, படிக்காதவர், அரசியலுக்கு தகுதி இல்லாதவர் என கடுமையாக விமர்சித்தார். ஆனால் தமிழக பாஜக தலைவர்களோ ரஜினிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ரஜினிகாந்தை அவன் அரசியலுக்கு வரமாட்டான் என ஒருமை யில் பேசினார். இது ரஜினி ரசிகர்களை கடுமையாக கொந்தளிக்க வைத்தது.சுப்பிரமணியன் சுவாமி பேட்டியின் வீடியோ மும்பை காலா படப்பிடிப்பில் உள்ள இயக்குநர் ரஞ்சித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் ரஜினிகாந்திடம் சுப்பிரமணியன் சுவாமி தம்மை ஒருமையில் திட்டும் வீடியோவை போட்டு காட்டியிருக்கிறார். இந்த விமர்சனத்தால் கடும் கோபமடைந்த ரஜினிகாந்த் படப்பிடிப்பில் ரஞ்சித் உள்ளிட்டோருடன் இது தொடர்பில் விவாதித்திருக்கிறார். அப்போது கடும் கோபத்தில் ‘வினாச காலே விபரீத புத்தி’ என ஸ்லோகத்தை சொல்லி சாடியிருக்கிறார் (அழிவுகாலம் தொடங்கிவிட்டதால் புத்தி கெட்டதைத்தான் பேசும், விபரீதமாகத்தான் யோசிக்கும் என்பது இந்த ஸ்லோகத்தின் அர்த்தம்). இத்தகவல் ரஜினி ஆதரவு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கிடைத்தது. ரஜினிகாந்த் வினாச காலே விபரீத புத்தி என திட்டியது சுப்பிரமணியன் சுவாமி யையா அல்லது அவரைத் தூண்டிவிட்ட பாஜகவையா? என்பதுதான் இப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்