சென்னையில், முதல்முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம்செய்து அசத்தியுள்ளது அப்போலோ மருத்துவமனை. இதயம், கண்கள் உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையின்போது இறந்தவரின் உறுப்புகளை, குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்த உறுப்பு தேவைப்படும் நபருக்குப் பொருத்த வேண்டும். உதாரணமாக, மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயத்தை, தொலைவிலுள்ள மருத்துவமனையில் உள்ள நபருக்குப் பொருத்த வேண்டும் என்றால், சாலை வழியேதான் கொண்டுசெல்ல வேண்டும். அந்த வாகனம் செல்லும் வழியில், போக்குவரத்தை முற்றிலுமாக மாற்றி யமைத்தால் மட்டுமே நேரத்துக்கு இதயத்தைக் கொண்டுபோய் சேர்க்க முடியும். இதுபோன்ற நேரத்தில், சாலை வழியாகக் கொண்டுசெல்வதைக் காட்டிலும் வான்வழியாகக் கொண்டுசெல்வதால், பல்வேறு சிரமங்களைத் தவிர்க் கலாம். இதை மனதில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுதான், அப்போலோவின் ’ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை’ திட்டம். அவசரசிகிச்சை தேவைப் படுவோருக்கு இந்த சேவை மறுவாழ்வளிக்கும். அப்போலோ மருத்துவமனையின் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கிவைத்துப் பேசிய தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன், ‘'தமிழக அரசும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை விரைவில் கொண்டு வர பரிசீலனை செய்யும்'’ என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்