2017-ம் ஆண்டின் ஃபெமினா மிஸ் இந்தியாவாக, ஹரியானா அழகி மனுஷி சில்லார் தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பையில், ஆண்டுதோறும் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டி நடைபெற்றுவருகின்றன. இந்த ஆண்டும் 54-வது ஃபெமினா மிஸ் இந்தியா போட்டி நடை பெற்றது. இந்தப் போட்டியில், ஹரியானாவைச் சேர்ந்த மனுஷி சில்லார் பட்டத்தைக் கைப்பற்றினார். மருத்துவ மாணவியான இவர், 30 மாநிலங் களிலிருந்து வந்த போட்டியாளர்களை வென்று, பரிசைத் தட்டினார். இதற்கு அடுத்ததாக, ஜம்மு -காஷ்மீரைச் சேர்ந்த சனா தூவா இரண்டாம் பரிசையும், பீகாரைச் சேர்ந்த பிரியங்கா குமார் மூன்றாம் பரிசையும் வென்றனர். மும்பை யஷ் ராஜ் ஸ்டூடியோவில் நடந்த இந்தப் போட்டியைப் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் கரண் ஜோஹர் மற்றும் முன்னணி பாலிவுட் நடிகர் ரித் தேஷ் தேஷ்முக் இணைந்து தொகுத்து வழங்கினர். சோனு நிகாம், ஆலியா பட், ரன்பீர் கபூர், சுஷாந்த் சிங் ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந் தப் போட்டிகான ஆடைகளைப் பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்திருந்தார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்