போயஸ் கார்டனில் தீபாவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி தீபா ஆதரவாளர்கள் கமிஷனர் அலுவலகத்தில் உருண்டு சென்று மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். ஜூன் 10 ஆம் தேதி போயஸ் கார்டனுக்கு தீபா சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் இடையே கருத்து வேறு பாடு ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து போயஸ் இல்லத்தில் தான் தாக்கப்பட்டதாக தீபா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தீபா தாக்கப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று வித்யாசமான முறையில் காவல்துறையிடம் மனு கொடுத்துள்ளார் தீபா பேரவையின் நிர்வாகி ஒருவர். கமிஷனர் அலுவலகம் முன்பு ஒருசில பெண் தொண்டர்களை ஒன்றுதிரட்டி சாலையில் உருண்டு சென்று கமிஷ்னரிடம் மனு கொடுக்க முயற்சி செய்துள்ளார் அவர். காவல்துறை அவர்களை தடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர். தீபா பேரவையின் தொண்டர்கள் இந்த வித்யாசமான மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்துபோது ”இளைய புரட்சி தலைவி தீபா வாழ்க” என்று கோஷங்கள் எழுப்பி அங்குள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்