img
img

இன்று துவங்குகிறது மகளிர் உலகக் கோப்பை, இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதல்
சனி 24 ஜூன் 2017 13:36:54

img

ஐ.சி.சி நடத்தும் பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்து மற்றும் வேலஸ்யில் இன்று துவங்குகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இன்று தொடங்கி ஜூலை 23-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் வெற்றி பெற லீக் சுற்று, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என்று மொத்தம் மூன்று சுற்றுகள். முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் மீதமுள்ள 7 அணியுடன் ஒரு முறை மோத வேண்டும். இதில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். தரவரிசையில் நான்காம் இடத்தில் இருக்கும் இந்தியப் பெண்கள் அணி மற்ற அணிகளுக்கு கடுமையான சவாலான அணியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மிதாலி ராஜ் பேட்டிங் மற்றும் ஜுலன் கோஸ்வாமி அனுபவ பந்துவீச்சு ஆகியவை இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்ப டுகிறது. பெண்கள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள், பலமான அணிகளாக கணிக்கப் பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கின்றது. இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்க கடுமையாகப் போராடும். பிரிஸ்டொல் நகரில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இலங்கை அணியை எதிர்கொள்கின்றது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img