ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர் பேரறிவாளன். இந்நிலையில், பேரறிவாளனை பரோலில் விடு விக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால், அவரது பரோல் மனுவை வேலூர் சிறை கண்காணிப்பாளர் நிராகரித்துவிட்டார். இதையடுத்து பேர றிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனிடையே இந்த விவகாரத்தை, தற்போது அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏ-க்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கையில் எடுத் துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினையும் அவர்கள் சந்தித்துப் பேசினர். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், "பேரறிவாளனின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. ஜெயல லிதா இருந்தபோது, என் மகனுக்கு பரோல் வழங்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். அவரின் இறப்பு, எனக்கு மிகப்பெரிய இழப்பு. ஜெயலலிதா மறைந்த பிறகு எல்லாம் மாறியிருப்பது கவலையளிக்கிறது. என் கணவரின் உடல்நிலை சரியில்லை என்பதால்தான், தற்போது பேரறிவாளனுக்கு பரோல் கேட்கிறோம். சட்டப்படிதான் பரோல் கேட்கிறோம். எங்களின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு அரசு பரோல் வழங்க வேண்டும்" என்று கூறினார்."இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வரிடம் பேசுவதாக அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்திருக்கிறார்'' என்று கருணாஸ் கூறினார்.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்