பேரறிவாளனுக்குப் பரோல் வழங்க சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர, அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏ-க்கள் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். 1991 மே 21-ம் தேதி, சென்னையில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு, விடு தலைப்புலிகள் அமைப்பின்மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, 26 ஆண்டுகளாக சிறையிலுள்ள பேரறிவாளன் ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களால் அவதிப் படுவதால், சிகிச்சைக்காக அவ்வப்போது சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். இதனிடையே, பேரறிவாளனின் தந்தை ஞானசேகரன் (75), உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டு, கடந்த 16 மாதங்களாக படுத்தபடுக்கையாக உள்ளார். அவரின் தாயார் அற்புதம்மாள் (69), நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, பலமுறை சாலைகளில் மயக்க மடைந்து விழுந்திருக்கிறார். அவர்களைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லாத நிலையில், அவர்களின் மகனாக சிறிது காலம் பெற்றோரைக் கவனித் துக்கொள்ளும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் பேரறிவாளன் சிறை விடுப்பு கோரியிருக்கிறார். இந்தக் கோரிக்கையைச் சிறைத் துறை நிராகரித்தது. இந்த நிலையில், சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க, சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏ-க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் இன்று சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்