img
img

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார்!
வியாழன் 22 ஜூன் 2017 18:51:24

img

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் 14-ம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பா.ஜ.க வேட்பாளராக, ராம் நாத் கோவிந்த் கடந்த சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது குறித்து, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமார் அறி விக்கப்பட்டுள்ளார். மீராகுமார், மக்களவை முன்னாள் சபாநாயகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 72 வயதாகும் மீராகுமார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்தக் கூட்டத்தில் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், சீதாராம் யெச்சூரி மற்றும் தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டார். பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத்தை ஆதரிக்க வேண்டும் என்று மோடி மற்றும் அமைச்சர்கள் காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img