தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய், இன்று தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். விஜய்யின் 61-வது படமான 'மெர்சல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று வெளியானது. இதில், விஜய்யின் பெயரை 'தளபதி விஜய்' எனக் குறிப் பிட்டுள்ளனர். 'இளைய தளபதி விஜய்யிலிருந்து' 'தளபதி விஜய்க்கு' மாற, இதை விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கான குறியீடாகவே பார்க்கின்றனர். விஜய்யின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மட்டுமன்றி, பிரபலங்கள் பலரும் வாழ்த்துச் சொல்லிவருகின்றனர். தற்போது, நடிகரும் பா.ஜ.க பிரமுகருமான எஸ்.வி.சேகர், ''கடின உழைப்பின்மூலம் படிப்படியாக முன்னுக்கு வந்த ஒரு நடிகர் என்றால் அது விஜய். இன்று அவரது பிறந்தநாள், அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும் என் ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நல்லவர்கள் அரசியலுக்கு வரணும், நேர்மையான ஆட்கள் வரணும், மக்களுடைய கஷ்டங்களைத் தெரிஞ்சவங்க வந்தால் போதும். விஜய்யும் அரசியலுக்கு வரக்கூடிய சூழல் இருக்கிறது. அதை, எப்போது என்பதை விஜய்தான் முடிவுசெய்ய வேண்டும். நல்லவர்கள் யார் வந்தாலும் என் ஆதரவு உண்டு. என்னைப் பொறுத்தவரை, நாடு நல்லா இருக்க, நல்லவங்க வந்தாலே போதும். வருங்கால முத லமைச்சர் விஜய்க்கு என் வாழ்த்துகளை நான் இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று தனியார் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்