img
img

நாங்கள் வெளிநடப்பு செய்ய இதுதான் காரணம்! மு.க.ஸ்டாலின் விளக்கம்
வியாழன் 22 ஜூன் 2017 15:44:14

img

'சட்டப் பேரவையிலிருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதை, ஊடகங்கள் தவறாகச் சித்திரித்து திசைதிருப்புகின்றன' என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில், தி.மு.க உறுப்பினர்களின் செயல்பாடுகள்குறித்து செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை யில், 'கடந்த 14.6.2017 அன்று தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தொடரில், பல்வேறு அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. 'தனியார் தொலைக்காட்சியில் வெளியான 'ஸ்டிங் ஆபரேஷன்' குறித்து விவாதம்செய்ய தி.மு.க கோரிக்கை எழுப்பியது. அதற்கு அனுமதியளிக்காத பேரவைத் தலைவர், தி.மு.க உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். கூட்டத்தொடரின் முதல்நாளே ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் வகையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஆகவே, முதல் நாள் நடைபெற்றது ’வெளியேற்றமே’ தவிர, தி.மு.க-வின் ’வெளிநடப்பு’ அல்ல. 20.6.2017 அன்று மாட்டிறைச்சித் தடைச்சட்டம் பற்றி சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவந்தேன். அதற்கு, “வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அந்த வழக்கில் வரும் தீர்ப்பை அரசு ஏற்றுக் கொள் ளும்” என்று முதலமைச்சர் பதிலளித்தார். கேரளா, புதுச்சேரி, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் மாட்டிறைச்சி சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதைச் சுட்டிக்காட்டிய போதும், முதலமைச்சர் அளித்த பதிலில் அந்தச் சட்டத்துக்கு ஒரு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை. ஆகவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக் கத்தை ஏற்க முடியாது என்று கூறி, தி.மு.க., சார்பில் வெளிநடப்பு செய்துவிட்டு, மீண்டும் அவைக்கு வந்தோம். அதுமட்டுமல்ல, அ.தி.மு.க-வின் கூட் டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களே முதலமைச்சரின் இந்தப் பதிலை ஏற்காமல் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தால், அப்படியே வீடு திரும்பி விடுவதில்லை. அவைக்குத்தான் உடனடியாக மறுபடியும் செல்கிறோம். எங்களின் ஜனநாயகபூர்வமான எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு, உடனடியாக மீண்டும் அவைக்குத் திரும்புவதை வெளியிடாமல், ஒரு சில ஊடகங்கள் திசைதிருப்பும் வகையில் செயல்படுவது வேதனையளிக்கிறது. மக்கள் பிரச்னைகள் பற்றி ஆக்கபூர்வமான விவாதங்களில் ஈடுபடுகிறோம். மாணவர்களைப் பாதிக்கும் ’நீட் தேர்வு’, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் தி.மு.க. எம்எல்ஏ-க்களைப் பங்கேற்கவிடாமல் கைது செய்தது, விவசாயிகள் கடன் தள்ளுபடி, உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போட்டுவருவது, மதுவிலக்குப் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களைக் கைது செய்தது, 110 விதியின் கீழ் கடந்த ஆறாண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட் டங்கள்குறித்த வெள்ளை அறிக்கை கோருவது, உலக முதலீட்டாளர் மாநாட்டில், மின்துறை சார்பில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு புரிந்துணர்வு ஒப் பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை கோருவது, ஜி.எஸ்.டி., மசோதாவை ஒத்திவைக்கக் கோருவது உள்ளிட்ட பல்வேறு பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் ஆளுங்கட்சியினர் என்னதான் குறுக்கீடு செய்தாலும், தி.மு.க. சார்பில் தொடர்ந்து வாதாடிவருகிறோம். ஆனால் சில ஊடகங்கள், “தி.மு.க. ஏதோ வெளிநடப்பு மட்டுமே செய்துகொண்டிருக்கிறது” என்பதுபோல் செய்திகளைச் சித்திரித்து வெளியிட்டு, பொறுப் புள்ள எதிர்க்கட்சியின் செயல்பாட்டைத் தவறான கண்ணோட்டத்தில் திசைதிருப்புகின்றன. அதே நேரத்தில், ’விவாதத்துக்கே தயாராகயில்லை’ என்று செயல்படும் ஆளுங்கட்சியின் ஜனநாயக விரோதப் போக்கு மற்றும் பேரவைத்தலைவரின் சர்வாதிகாரப் போக்கு ஆகியவை பற்றி எழுதவோ செய்திகள் வெளியிடவோ ஊடகங்கள் தயங்குவது வியப்பளிக்கிறது. தி.மு.க உறுப்பினர்கள் அவையில் செயல்படுவதை, பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகை யில் செய்திகளாக வெளியிட்டு, சட்டமன்ற ஜனநாயகத்தை ஆக்கபூர்வமான பாதையில் வழிநடத்திச்செல்வதற்கு, பத்திரிகைச் சுதந்திரம் பயன்பட வேண் டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img