அகர்தலா, திரிபுரா மாநிலத்தின் தெற்கு பகுதியில் ஷந்திர்பஜார் என்ற இடம் உள்ளது. மக்கள் நெருக்கம் மிகவும் குறைந்த ஊரக பகுதியான இங்கு இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் 200 சிறுபான்மையின குடும்பத்தினரில் 25 குடும்பத்தினர் சிபிஐ-எம் கட்சியில் இருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். 25 குடும்பத்தினரும் பாரதீய ஜனதாவில் இணைய ஆளும் சிபிஐ-எம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக ரீதியாக ஒதுக்கிவைக்கப்படு வீர்கள் எனவும் அரசு உதவிகளை நிறுத்துவோம் எனவும் ஆளும் கட்சியினர் மிரட்டி வந்துள்ளனர். இதன் ஒருபடியாக ஊரகவேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதையும் ஆளும் கட்சியினர் நிறுத்தியுள்ளனர். இருப்பினும், அவர்கள் தங்கள் முடிவை மாற்ற மறுப்பு தெரிவித்து விட்டனர். இதையடுத்து, உள்ளூர் மக்களை கூட்டி, பாரதீய ஜனதாவில் இணைந்த காரணத்தால் 25 குடும்பத்தினரும் மசூதி செல்ல அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இமாம் மூலமாக பத்வாவும் அவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரியவந்ததையடுத்து, இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாவட்ட நிர்வாகம், இந்த சம்பவம் எங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது, ஆனால், இது குறித்து முறையான புகார் அளிக்கப்படவில்லை. தனி நபர் ஒருவரின் மத உரிமையோ அல்லது வேறு எந்த உரிமையும் மறுக்கப்பட்டு இருந்தால், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்