அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா, பாஸ்கரன் மீது எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 1996-97 காலகட்டத்தில், வெளிநாடுகளிலிருந்து ஜெயா டிவி-க்குத் தொலைத்தொடர்பு சாதனங்கள் வாங்கிய வழக்கில் ஏற்கெனவே சசிகலா, திவாகரன், பாஸ்கரன் ஆகியோர்மீது அந்நியச் செலாவணி வழக்கு இருந்து வருகிறது. அமலாக்கத்துறையினர், இவர்கள்மீது ஐந்து வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு, சுமார் 20 ஆண்டுகளாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில், ஏற்கெனவே இரு மாதங்களுக்கு முன்னர் டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இந்த நிலையில் சசிகலா காணொலிக்காட்சி மூலமாகவும், பாஸ்கரன் நேரிலும் ஆஜராகினர். கைதி உடையில் ஆஜரான சசிகலாவிடம் நீதிபதி ஜாகிர் உசைன் கேள்விகளை எழுப்பினார். அவர் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த குற்றச்சாட்டை வாசித்துக்காட்டினார். அந்தக் குற்றச்சாட்டுகளை சசிகலா மறுத்தார். மேலும் தன்மீது பொய்யான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சசிகலா தெரிவித்தார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்