சென்னை: முதல்வராகி நூறு நாட்களை கடந்து விட்ட சூழ்நிலையில், பலவீனமான முதல்வர் போல தன்னை காட்டிக் கொண்டிருந்த முதல்வர் பழனிச்சாமி, திடீர் தெம்பு வந்தவராக, இன்னும் மூன்றரை ஆண்டுகளுக்கும் நான் தான் முதல்வர். என் தலைமையிலான ஆட்சி சிறப்பான ஆட்சி என்று சொல்லும் அளவுக்கு பெயர் வாங்க விரும்புகிறேன். நீங்களும் அதே எண்ணத்தோடு, என்னோடு இணைந்து செயல்படுங்கள். அப்போதுதான், மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும் என்று அமைச்சர்களிடம் அதிரடியாக பேசி வருவதாக தகவல் பரவி இருக்கிறது. இது குறித்து, கோட்டை வட்டாரங்கள் கூறியதாவது:முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக, தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்க்ளை தூண்டி விட்டு, அரசி யல் செய்து வருகிறார் தினகரன். இதனால், தினகரன் மீது காட்டம் ஆகி உள்ள பழனிசாமி, தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் வேளையில், செயல் பட்டுக் கொண்டிருக்கிறார். அடுத்தகட்டமாக, ஜெயலிதா பாணியில் அதிரடியாக அரசியல் செய்தால் மட்டுமே, அரசியல் எண்ணங்களுக்கு வழி தேட முடி யும் என்று நினைக்கும் பழனிச்சாமி, எல்லா அமைச்சர் அலுவலகங்களிலும், தனது படத்தை மாட்ட வைத்தார். இது சர்ச்சையை கிளப்பி இருந்தாலும், இதில் இருந்து பின் வாங்க மாட்டேன் என, முதல்வர் அதிரடியாக சொல்லி விட்டார்.தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.,க்கள் அத்தனை பேரையும், அடிக்கடி சந்திக்கும் முதல்வர் பழனிச்சாமி, ஆட்சி கவிழ்ப்பு வேலையில் ஈடுபட்டால், இனி எக்காரணம் கொண்டும் தமி ழகத்தில் அ.தி.மு.க., ஆட்சிக்கு வராமல் போய் விடும். அதற்கு தினகரன் காரணமாக இருக்கக் கூடாது என்கிறார்.தேர்தல் நடந்தால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து விடும். அதற்கு எம்.எல்.,ஏ.,க்கள் தயாராக இருப்பரா? என கேள்வி எழுப்பி உள்ளார். இதையடுத்தே, தினகரனை நோக்கிச் சென்ற அ.தி.மு.க., ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் பலரும், எடப்பாடி பழனிச்சாமியிடம் நெருக்கமாக உள்ளனர். இவ்வாறு, கோட்டை வட்டாரங்கள் கூறின.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்