img
img

சசிகலாவை ஏன் சந்தித்தார் தம்பிதுரை?
செவ்வாய் 20 ஜூன் 2017 17:22:16

img

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவை நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்துப் பேசியிருக்கிறார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. ' குடியரசுத் தலைவர் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாகவும் தமிழக அரசியல் தொடர்பாகவும் சசிகலாவிடம் விவாதித்தார் தம்பிதுரை. தினகரனின் செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டிருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு. இதுதொடர்பாக, நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கோரினார் பிரதமர் மோடி. திகார் சிறையில் இருந்து வெளிவந்த நாள் முதலாக, எடப்பாடி பழனிசாமியை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் வேலைகளில் ஆர்வம் காட்டினார் தினகரன். நான் ஒதுங்கியிருந்தால் கட்சி இணையும் என எதிர்பார்த் தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, கட்சிப் பணிகளில் ஈடுபட இருக்கிறேன்' எனப் பேட்டியளித்தார். இதனை மூத்த அமைச்சர்கள் பலரும் விரும்பவில்லை. அவர்கள் யாரும் தினகரனை ஒருபொருட்டாக எடுத்துக் கொள்ளாததால், தனக்கான ஆதரவு எம்.எல்.ஏக்களை வீடு தேடி வரச் செய்தார். இதனால், 'ஆட்சிக்கு சிக்கல்' என்பன போன்ற தகவல்கள் வெளியானது. அதேநேரம், தினகரனை சந்தித்த எம்.எல்.ஏக்களை எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துப் பேசினார். " எம்.எல்.ஏக்களை தினகரன் அணி திரட்டியதற்குக் காரணமே, குடி யரசுத் தலைவர் தேர்தலை மனதில் வைத்துத்தான். இதை வெளிப்படையாகக் கூறாமல், தன்னுடைய ஆதரவாளரான தங்க.தமிழ்ச்செல்வனைப் பேச வைத்தார் தினகரன். ' நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறோம். உங்கள் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றால், எங்களுக்கென்று கட்சி அலுவலகம் இருக்கிறது. அங்கு வந்து தினகரனிடம் ஆதரவு கேட்க வேண்டும்' என வெளிப்படையாகப் பேசினார். இதனை ஆளும்கட்சியின் அமைச்சர்கள் யாரும் ரசிக்கவில்லை. இன்று சசிகலாவை சந்தித்த தம்பிதுரை, ' குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.கவை நாம் ஆதரிக்க வேண்டும். உங்களிடம் இதுகுறித்து தெரிவிக்குமாறு டெல்லி மேலிடம் தெரிவித்தது. அ.தி.மு.கவின் அனைத்து எம்.எல்.ஏக்களும் பா.ஜ.க வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். தினகரன் தரப்பிடமும் இதை நீங்கள் எடுத்துக் கூற வேண்டும்' எனத் தெரிவித்தவர், தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கும் இரட்டை இலை விவகாரம் தொடர்பாகவும் மாநில அரசு எந்தவித சர்ச்சையிலும் அடிபடாமல் செயல்படுவதைப் பற்றியும் விவரித்திருக்கிறார். இதன்பின்னர், தினகரனும் சசிகலாவை சந்தித்து நடந்த சம்பவங்களை எடுத்துக் கூறினார். அவரிடம் பேசிய சசிகலா, ' எந்த ஒரு காரியமாக இருந்தாலும், நிதானமாகச் செயல்படுமாறு பலமுறை கூறியிருக்கிறேன். நமக்கு சாதகமாக எல்லாம் மாறும் வரையில் அமைதியாகத்தான் இருக்க வேண்டும்' எனத் தெரிவித்திருக்கிறார். இந்த சந்திப்பின் முடிவில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் பா.ஜ.க வேட்பாளரை ஆதரிக்க உள்ளனர். வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் எதிர்ப்பு காட்டினாலும், சசிகலாவின் உத்தரவை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்" என்கிறார் மன்னார்குடி அ.தி.மு.க பிரமுகர் ஒருவர். " திவாகரனுக்கு எதிராக சில நாட்களுக்கு முன்பு மன்னார்குடியில் கூட்டம் போடத் திட்டமிட்டார் தினகரன். இதற்காக, பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத், புகழேந்தி உள்ளிட்டவர்கள் மன்னார்குடிக்கு விரைந்தனர். ' என் தொகுதிக்குள்ள உங்க ஆட்டமா?' எனக் கடுப்பான திவாகரன், கூட்டத்துக்குப் போடப்பட்ட பந்தல்களைப் பிரிக்க வைத்தார். கூட்டமும் ரத்தானது. இதன் தொடர்ச்சியாக சிறையில் சசிகலாவை சந்தித்தவர், ' பா.ஜ.கவை நாம் அனுசரித்துச் சென்றால்தான், நீங்கள் சிறையில் இருந்து வெளியில் வர முடியும். தினகரனின் செயல்பாடுகளால், நீங்கள் நிரந்தரமாக சிறையில் இருக்க நேரிடும். அவருடன் இருக்கும் சில நிர்வாகிகள் அவரைத் தவறாக வழிநடத்துகின்றனர். அவரது செயல்களால், வழக்குக்கு மேல் வழக்குத்தான் வந்து சேரும். அவரைக் கட்சியைவிட்டே ஒதுக்கி வையுங்கள்' எனத் தீர்மானமாகக் கூறிவிட்டு வந்தார். இதன்பிறகு, தினகரனின் செயல்பாடுகளில் வேகம் இல்லை. குடும்ப உறவுகளும் அமைதியாகிவிட்டனர். தங்கள் குடும்பத்துக்கு எதிராக டெல்லியில் வரிந்துகட்டும் தமிழக லாபிகளைப் புரிந்து கொண்டு அமைதியாக இருக்கிறார் சசிகலா. அதே மனநிலைக்கு குடும்ப உறவுகளும் வந்துவிட்டனர். டெல்லியில் அவருக்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தம்பிதுரை தெரிவித்திருக்கிறார். சொத்துக் குவிப்பு வழக்கின் ரிவியூ மனுவின் மீதான உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் சசிகலா" என்கிறார் அ.தி.மு.கவின் முக்கிய பிரமுகர் ஒருவர். இது எங்களுடைய அரசு' என திவாகரன் தரப்பினர் பேசத் தொடங்கியுள்ளனர். இதற்கெல்லாம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எந்தப் பதிலும் அளிக்க விரும்பவில்லை. ' தேர்தல் ஆணையத்தின் முடிவை அடுத்தே, அடுத்தகட்டத்தை யோசிக்க முடியும்' எனவும் தீர்மானமாகச் சொல்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img