பரபரப்பான பெங்களூரு சாலையில், ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக குடியரசுத் தலைவரின் காரையே தடுத்து நிறுத்திய போக்குவரத்துக் காவலருக் குப் பாராட்டுகள் குவிகின்றன. கடந்த சனிக்கிழமை, பெங்களூருவில் மெட்ரோ க்ரீன் லைன் திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பலத்த பாதுகாப்புடன் ட்ரினிட்டி பகுதி வழியாக அழைத்துச் சென்றது பெங்களூரு போலீஸ். அப்போது, ட்ரினிட்டி பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் எம்.எல். நிஜலிங்கப்பா, அந்த வழியை ஆம்புலன்ஸ் ஒன்று கடக்க முடியாமல் நின்றுகொண்டிருப்பதைக் கவனித்துள்ளார். உடனே சற்றும் யோசிக்காமல், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் காரை தடுத்துநிறுத்தி, முதலில் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைக் கவனித்த மற்ற அதிகாரிகளும் பொதுமக்களும் அவரைப் பாராட்டியுள்ளனர். இந்தச் சம்பவம், சமூக வலைதளம் வாயிலாகப் பரவி, ஒரே நாளில் நிஜலிங்கப்பாவை ட்ரெண்டாக்கிவிட்டது. அனைவரின் மனதிலும் நிஜலிங்கப்பா நீங்கா இடம் பிடித்துவிட்டார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்