தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத் கோவிந்த்தை விமர்சித்ததற்காக, பிரபல பெண் பத்திரிகையாளர் ரானா அயூப் மீது பா.ஜ.க-வினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். 2002 ஆம் ஆண்டு முதல் 2010 வரை குஜராத்தில் நடந்த படுகொலைகள், போலி என்கவுன்ட்டர்கள்குறித்து உயிரையும் துச்சமாக மதித்து, உண்மையை யும் நீதியையும் வெளியே கொண்டு வர, புலனாய்வுப் பணியை மேற்கொண்டவர், பத்திரிகையாளர் 'ரானா அயூப்'. இவர் எழுதிய "Gujarat Files: Anatomy of a Cover Up " என்ற புத்தகம், அரசியலின் பல நிலைகளையும் ஆட்டம் காணச்செய்தது. அதிகார வர்க்கத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ரானா அயூப் சமீபத்திய ட்வீட்டில், ஜனாதிபதி வேட்பாளர் செய்தியைவைத்து, ‘பிரதீபா பாட்டீல் மோச மான தேர்வு எனத் தெரிவித்தவர்கள்தானே’ எனப் பதிந்திருந்தார். இதற்காக, அவர் மீது 'தரக் குறைவான விமர்சனம்’ செய்ததாக வழக்குப் பதிந்துள்ளது பா.ஜ.க. வழக்கைப் பதிவுசெய்த பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தன் ட்விட்டர் பக்கத்தில், ‘ரானா அயூப் வெறுப்பு நிறைந்த, தரக் குறை வான, சாதியத் தாக்குதலுடன் கருத்து பதிந்துள்ளார்’ எனக் குறிப்பிட்டு, ரானா அயூப் மீதான புகார் மனுகுறித்தும் விளக்கியிருந்தார். இதற்குப் பதிலடி தரும் வகையில் ரானா அயூப், ‘சாதியரீதியில் நான் விமர்சித்தேனா... 'மழைக்கு அணியும் கோட்டுடன் குளிக்கும் வித்தையை அறிந்த வர் மன்மோகன் சிங்' என்ற மோடியின் விமர்சனத்தை, சீக்கிய சமூகத்துக்கு எதிரானதாக எடுத்துக்கொள்ளலாமா’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்