img
img

சீருடைக்குப் பணம் செலுத்த முடியாததால் பள்ளியே ஆடைகளைக் களைந்த பரிதாபம்!
திங்கள் 19 ஜூன் 2017 13:13:34

img

பீகார் மாநிலம் சிக்ராலா கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி பி.ஆர். எஜூகேஷன் அகாடமி. இந்தப் பள்ளி தனது பள்ளி மாணவர்களுக்குக் கட் டண அடிப்படையில் சீருடை வழங்கி இருக்கிறது. இரண்டு மாணவிகள் சீருடைக்குப் பணம் செலுத்தாததால் அவர்களின் உடைகளைக் கழற்றி வாங் கிக்கொண்டு வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது பள்ளி நிர்வாகம். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (16.06.2017) நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகளும் சகோதரிகள். ஒருவர் முதல் வகுப்பிலும், மற்றொரு மாணவி இரண்டாம் வகுப்பிலும் படிக்கிறார்கள். இவர்களது தந்தை சாஞ்சன் சாஹ் வெள்ளிக்கிழமை மகள்களை அழைக்க பள்ளிக்குச் சென்றிருக்கிறார். வகுப்பு ஆசிரியையோ, உடனடியாகச் சீருடைக்கான பணத் தைச் செலுத்திவிட்டு மகள்களை அழைத்துச் செல்லும்படி சொல்லியிருக்கிறார். சாஹ் இரண்டு பெண் குழந்தைகளின் சீருடைக்கான பணம் செலுத்து வதற்கு கொஞ்சக் காலம் அவகாசம் கேட்டிருக்கிறார். ஆனால், அவரது கண் முன்னாலேயே, அனைத்து ஆசிரியர்களுக்கும் மத்தியில் இரண்டு பெண் குழந்தைகளின் ஆடைகளையும் களைந்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். சாஹ், வழி தெரியாமல் காவல் நிலையத்தை நாடியிருக்கிறார். இவரது கதறலில் காவல்துறை பள்ளியின் மீது வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. 'இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் பள்ளியின் முதல்வரையும், வகுப்பு ஆசிரியையும் கைது செய்து இருக் கிறோம்' என்கிறார் காவல் துறை அதிகாரி ராஜேஷ்குமார். மாநில கல்வி அமைச்சர் அஷோக் சௌத்ரி 'இந்தச் சம்பவத்தை உடனடியாக விசாரித்து பள் ளியின் மீதும், சம்பந்தப்பட்டவர்களின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறி இருக்கிறார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img