img
img

பணப்பட்டுவாடா விவகாரத்தில் மு.க.ஸ்டாலினை அதிரவைத்த முதல்வரின் விளக்கம்!
திங்கள் 19 ஜூன் 2017 13:08:28

img

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்த விவகாரத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு, முதல்வர் பழனிசாமி அளித்த பதில் அவரை அதிரவைத்தது. ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறவிருந்த ஆர்.நகர். தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிட்ட தினகரனுக்கு வாக் களிப்பதற்காக வாக்காளர்களுக்குத் தலா 4000 ரூபாய் வீதம் பணம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதற்கு பல ஆதாரங்களும் கிடைத்த நிலையில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. இந்தநிலையில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் ஒரு வருக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் பணம் விநியோகித்தது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக காவல்துறைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த விவகாரம் சட்டப்பேரவையில் இன்று விஸ்வரூபம் எடுத்தது. ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில் தேர்தல் ஆணைய பரிந்துரை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, மு.க.ஸ்டாலினை பேச விடாததால் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணைய பரிந்துரைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டதா எனக் கேள்வி எழுப்பினார். மேலும், போலீஸை கையில் வைத்திருக்கும் முதல்வர் இருந்தால் எப்படி விசாரணை நடக்கும் என்று மு.க.ஸ்டாலின் வினா எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், ஆர்.கே.நகர் விவகாரம் தொடர்பாக முதல்வரே பதிலளிப்பார் என்றும், தேர்தல் ஆணையத்தின் பதிலில் முதலமைச்சர் உள்ளிட்டோர் பெயர் இல்லை என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து விளக்கமளித்த முதல்வர் பழனிசாமி, ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா தொடர்பாகத் தேர்தல் அதிகாரியின் புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், கடந்த தேர்தலில் பணப்பட்டுவாடா தாெடர்பாக திமுகவினர்மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் கூறினார். மேலும், அவையில் ஏதாவதொரு பிரச்னையை ஏற்படுத்தவே திமுகவினர் வருகின்றனர். அவையில் பிரச்னை ஏற்படுத்துவதால் திமுகவினருக்கு ஒன்றும் கிடைக்காது எனக் குற்றம்சாட்டினார். முதல்வரின் இந்த விளக்கத்தைக் கேட்டு அதிர்ந்த மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள், முதல்வரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img