நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது அரசியல் குறித்து அவர் கூறிய கருத்துகளால் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினியின் அரசியல் கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வருகின்றன. இதனால், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, தமிழருவி மணியன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ரஜினியைச் சந்தித்தனர். அவர்களிடம் அரசியலுக்கு வருவது குறித்து ரஜினி கருத் துக் கேட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், ரஜினிகாந்த்தை, போயஸ் கார்டனிலுள்ள அவரது இல்லத்தில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம் பத் சந்தித்தார். ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அர்ஜூன் சம்பத்துடன் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் இராம.இரவிக்குமார், இளைஞரணி மாநில பொதுச் செயலாளர், D.குருமூர்த்தி உள்ளிட்டோர் ரஜினியைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், "ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக ரஜினி கூறினார். அதற்கான ஏற்பாடுகளை ரஜினி செய்து வருகிறார். நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே ரஜினி யின் எண்ணம். ரஜினி சிங்கமாக, சிங்கிளாக அரசியலுக்கு வருவார். அவரது தலைமையில் கூட்டணி அமைத்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அவரை பி.ஜே.பி இயக்கவில்லை" என்று கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்