img
img

“சிறையில் துன்புறுத்தப்படுகிறார் நளினி!” பதறும் வழக்கறிஞர்
திங்கள் 19 ஜூன் 2017 12:52:34

img

உலகில் இத்தனை வருடங்களாக ஒரு குற்றவழக்கு பயணித்திருக்குமா எனத்தெரியவில்லை. வழக்கு ஓர் முடிவுக்கு வருமா வராதா என இன்னமும் பட்டிமன்றம் நடக்கின்றது படித்தவர்கள் மத்தியில். அத்தனை சட்டச்சிக்கல்கள். அவ்வப்போது வழக்கு தொடர்பாக வெளிவரும் அதிர்ச்சி சம்ப வங்கள் வேறு இதில் கிளைக்கதை. இப்படி 30 ஆண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கிறது ராஜிவ் காந்தி கொலைவழக்கு. குற்றவாளிகள் எனக் கூறப்பட்டவர்களில் முருகன், சாந்தன், பேரறி வாளன் மூவரும் வேலுார் மத்திய சிறையிலும் நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தண்டிக்கப்பட்ட குற்றவாளி களுக்கான அடிப்படை உரிமைகள் அத்தனையும் மறுக்கப்படுவதாக சமூக அமைப்புகள் போராடி வருகின்றன. இதுவரை பின்பற்றப்பட்டுவந்த ஆயுள் தண் டனைக்கான வழக்கமான காலகட்டத்தையும் தாண்டி அவர்கள் சிறையிலடைக்கப்பட்டிருப்பதும் சட்ட வல்லுநர்களிடையே ஆயுள் தண்டனையின் சட்ட வரையரை குறித்த வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான நளினி, தன்னைச் சிறையில் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தான் துன்புறுத்தப்படுவதாகக் கூறி கடந்த 13 ஆம் தேதி முதல் வேலுார் பெண்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்துவருகிறார். தன்னை புழல் சிறைக்கு மாற்றும்படி சிறைத்துறைக்குக் கோரிக்கை வைத்திருக்கும் அவர், அதை நிறைவேற்றும் வரை தான் உண்ணாவிரதத்தைத் தொடரப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். இன்றுடன் 7-வது நாளைத் தொடுகிறது அவரது உண்ணாவிரதம். இதனிடையே கடந்த 16 ஆம் தேதி நளினியை சிறையில் சந்தித்துவிட்டு திரும்பியிருக்கிறார் அவரது வழக்கறிஞர் புகழேந்தி. அவர் இப்படி கூறுகிறார். “மகள் திருமணத்துக்கும் சிறை மாற்றும் கோரிக்கைக்கும் சம்பந்தமில்லை. நளினி கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் சிறையில் அடை பட்டிருக்கிறார். இதுவரை அவருக்குப் பெரிய அளவிலான தொல்லைகள் இருந்ததில்லை. இப்போது உள்ள கண்காணிப்பாளர் ராஜேஸ்வரிதான் நளினி தன்னை வேறு சிறைக்கு மாற்றக்கோரக் காரணம். நீண்ட கால சிறைவாசி என்பதால் நளினிக்கு சிறைவிதிகள் மற்றும் சிறைவாசிக்கான உரிமைகள் அனைத்தும் தெரியும். இதனால் சிறைவாசிகளில் யாருக்கு எது நடந்தாலும் அதை எதிர்த்துக் கேட்பது அவரது வழக்கம். இது ராஜேஸ்வரிக்கு உறுத்தலாக இருக்கவே அவர் நளி னியைக் கடந்த சில மாதங்களாக மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்திவருகிறார். சமீபகாலமாக அவரது துன்புறுத்தல் எல்லை மீறிப் போன நிலையில்தான் தன்னை வேறு சிறைக்கு மாற்ற சிறைத்துறைக்கு மனு செய்தார். ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேசமயம் தனக்கு எதிராக மனு செய்த ஆத்திரத்தில் ராஜேஸ்வரி சில நாள்களாக நளினி மீது கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். பொதுவாகவே கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி சிறைக்கைதிகளிடம் முரட்டுத்தனமாகவே நடந்துகொள்வார். அவரைக் கண்டாலே கைதிகள் அலறு கிறார்கள். நேரிடையாக அவர் எதிலும் தலையிடமாட்டார். கையாட்கள் போல எப்போதும் அவருடன் இருக்கும் 4 வார்டர்களும் சில சிறைவாசிகளும் தான் அவர் சொல்படி சிறைவாசிகளுக்குத் தொல்லை தருவார்கள். உடல் பிரச்னையால் சமீபத்தில் தகுதியின்மை செய்யப்பட்டு ராஜேஸ்வரியின் பதவி உயர்வு தடைபட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆத்திரத்தில் அவரது செயல்கள் எல்லைமீறிவீட்டதாகச் சொல்கிறார்கள். மற்ற சிறைக்கைதிகள் வேறு வழியின்றி இதை சகித்துக்கொண்டாலும், சிறைவிதிகளை நன்கறிந்த நளினியால் அப்படி சகித்துக்கொள்ள முடியவில்லை. எதற்கும் பயப்படாமல் ராஜேஸ்வரியின் தவறுகளைத் தட்டிக்கேட்பார். இதன் எதிரொலியாக மேற்சொன்ன வார்டர்கள் மற்றும் சிறைவாசிகள் அவரை அவதூறாகப் பேசுவது, ஆத்திரம் உண்டாக்கும் அளவு யாரையோ பேசுவது போல் அவரைப்பேசுவது, அவருக்கான எந்த விஷயத்தையும் தாமதமாக வழங்குவது எனத் தொடர்ந்து தொல்லை தந்து வருகிறார்கள். நளினியின் உத வும் குணத்தால் பெண் சிறைவாசிகள் சிலர் அவருக்கு சிற்சில உதவிகளைச் செய்வார்கள். அவர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாகும் அளவு கொடுமைப்படுத்தி நளினியை அவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார் ராஜேஸ்வரி. இதனால் நளினி கடந்த சில நாள்களாகவே தீவிர மனஉளைச்சலில் இருந்தார். இனி பொறுத்துக்கொள்ளமுடியாது என்ற நிலை உருவானபின்னர்தான் தன்னை வேறு சிறைக்கு மாற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்துவருகிறார் அவர்.” என்றார் புகழேந்தி. சிறைத்துறை தரப்பில் உத்தரவாதம் ஏதும் அளித்துள்ளார்களா எனக் கேட்டோம். “ ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு, டி.ஐ.ஜி பாஸ்கர் மற்றும் சில உளவுப்பிரிவு அதிகாரிகள் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், உண்ணாவிரதம் 7 நாள்களைக் கடந்தும் இதுவரை எந்த உத்தரவாதமும் அளிக்க வில்லை. அதேசமயம் தனது கோரிக்கைக்காக நளினி நீதிமன்றம் செல்லப்போவதில்லை; என்ன ஆனாலும் சரி, உண்ணாவிரதத்தைக் கைவிடு வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அரசு நியாயமான தனது கோரிக்கையை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் உள்ளார் அவர். ” என்ற வழக் கறிஞர் புகழேந்தி, தொடர்ந்து பேசினார். “நளினியின் மகள் திருமணம் விரைவில் நடக்கவுள்ளது. அதனால் நீண்ட விடுப்பு கேட்டு விண்ணப்பிக்க இருக்கிறோம். ராஜிவ் வழக்கில் நளினி உள் ளிட்டவர்களுக்காக சட்டமன்றத்தில் சாதகமான தீர்மானத்தை இயற்றியது தமிழக அரசு. பிரிவு 435 ன் கீழ் தமிழக அரசுக்கு இந்த உரிமை உள்ளதா இல்லையா என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்துவருகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வசிக்கும் சிறைவாசிகளை அவர்கள் எத்தனை கொடூரக் குற்றம் புரிந்தவராக இருந்தாலும் அவரது குற்றத்தின் தன்மையைக் கணக்கில் கொள்ளாமல் மனிதநேயத்துடன் அவரை விடுவிக்கலாம்' என்ற ஓர் ஆணையை 1994 ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் ராஜிவ் கொலைக்குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான மாநில அரசின் உரிமை குறித்த வழக்கு, இந்த ஆணையின் கீழ் நளினி வெளிவர முட்டுக்கட்டையாக உள்ளது. ஏற்கெனவே விடுதலை தொடர்பாக நளினி தொடுத்த வழக்கில் தீர்ப்பு கூறிய சென்னை உயர்நீதிமன்றம், 94 ஆம் ஆண்டின் அரசாணையைக் குறிப்பிட்டு 'வழக்கு முடிவுற்றால் நளினியின் விடுதலை குறித்து பரிசீலிக்கலாம்' எனக் கூறியுள்ளது. உச்சநீதிமன்ற வழக்கினால் மாநில அரசின் முன்விடுதலை திட்டத்தின்படி நளினி விடுதலையாவது ஏற்கெனவே 2 ஆண்டுகள் தாமதமாகிவிட்டன. இன்னும் எத்தனை ஆண்டுகள் வழக்கு நீடிக்கும் என்பதும் தெரியாது. ஆகவே அதன் அடிப்படையில் வழக்கு முடிவுற்று தீர்ப்பு வரும்வரை நளினிக்கு நீண்ட விடுப்பு வழங்கவேண்டும் எனக் கேட்கவுள்ளோம்” என்றார் வழக்கறிஞர் புகழேந்தி.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img