மாடுகளை இறைச்சிக்காக விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதற்கு எதிராக தினசரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி உணவு இல்லாததால், திருமணம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனிடையே, திருமண விழாவில் மாட்டிறைச்சி பரிமாறப்படவில்லை. இதை யடுத்து, மாட்டிறைச்சி பரிமாற வேண்டும் என்று மணமகன் வீட்டினர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதை மணமகள் வீட்டினர் ஏற்கவில்லை. 'மாட்டிறைச்சிக்கு நாடு முழுவதும் தடை இருக்கும் போது, எப்படி மாட்டிறைச்சி போடுவது?' என்று கூறி அவர்கள் மறுத்து விட்டனர். குறிப்பாக, மணமகன் வீட்டினர் தரப்பில் வரதட்சணையும் கேட்டுள்ளனர். இந்த இரண்டு நிபந்தனைகளையும் மணமகள் வீட்டினர் ஏற்கவில்லை. இத னால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்