வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பயிர் கடன் ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு டெல்லியில் 42 நாள்கள் தொடர் போராட்டம் நடத்தினார். இதேகோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம், சென்னையிலும் அய்யாக்கண்ணு போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனி சாமி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தப்பின் போராட்டம் கைவிடப்பட்டது. அதேபோல் நதிகளை இணைக்க வேண்டும் என்று அய்யாக் கண்ணு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக முன்பு நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து இருந்தார். இந்நிலையில், ரஜினியை அவரது இல்லத் தில் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாய பிரதிநிதிகள் சந்தித்தனர். அப்போது நதிகள் இணைப்புக்காக, பிரதமரிடம் ஒரு கோடி ரூபாய் தர அய்யாக் கண்ணு வலியுறுத்தினார். இது குறித்து அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம், "நதிகள் இணைப்புக்காக, ஒரு கோடி ரூபாயை பிரதமரிடம் வழங்கக் கூறினோம். தான் அறிவித்த படியே, ஒரு கோடி ரூபாய் தருவதாக ரஜினி கூறியுள்ளார். மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, தென் பெண்ணை, பாலாறு, காவிரி ஆகிய நதிகளை இணைக்க வேண்டும் என்று ரஜினி கூறினார். மேலும், போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று ரஜினி கூறினார்" என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்