ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், ஆர்.கே.நகர் தேர்தலின் போது, வாக்காளர் களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் புகாரால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். அதில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? உள்ளிட்ட எட்டு கேள்விகளை அவர் கேட்டிருந்தார். இதற்கு, "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி தினக ரன் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது" என்று பதில் வந்துள்ளது. வைரக்கண்ணன் கேட்ட மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை. முதல்வர் எடப்பாடி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்வதற்கான பரிந் துரையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், கடந்த மே மாதம் முன் இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு தற்போது விளக்கமளித்துள்ள தேர்தல் ஆணை யம், 'இந்த பரிந்துரை கடந்த மே மாதம் அனுப்பப்பட்டது. தற்போது இததொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை' என்று கூறியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்