img
img

முதல்வர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால்'.... காவல்துறையை எச்சரிக்கும் ஸ்டாலின்!
ஞாயிறு 18 ஜூன் 2017 16:16:47

img

ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே கொசஸ்தலை நதியின் குறுக்கே, தடுப்பு அணைக் கட்டும் முயற்சியில் அம்மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு தமி ழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தடுப்பு அணை கட்டும் பணிகளை கை விட வேண்டும் என்று, ஆந்திர முதல்வருக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், வேலூர் மாவட்டம், கங்குந்தியில் ஆந்திர அரசு உயர்மட்ட தரைப்பாலம் கட்டும் பணிகளை, தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். இதுகுறித்து ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், "குப்பம் - கங்குந்தி இடையில் பாலாறு பாயும் 1 கிலோ மீட்டரில் உள்ள தரைப்பாலத்தை மாற்றி, ரூ.4.5 கோடி செலவில் உயர்மட்டப் பாலமாக கட்டும் பணிகளை ஆந்திர அரசு தொடங்கியிருப்பது வேதனைக்குரியது. ஏற்கெனவே வேலூர், திரு வள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பாலாறு மற்றும் கொசஸ்தலை ஆகிய ஆறுகள் மூலம் வர வேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டு பல தடுப் பணைகள் கட்டப்பட்டுள்ளதால், ஏராளமான நம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் தட்டிக் கேட்டு, நம் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசோ, தங்களுடைய அரசை காப்பாற்றிக் கொள்ள குதிரை பேர ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. இது தரைமட்டப்பாலம் என்று தெரிவித்தாலும், வருங்காலத்தில் தடுப்பணையாக மாற்றப்படும் என்ற அச்சம் விவசாயப் பெருங்குடி மக்களிடம் ஏற்பட் டுள்ளது. எனவே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதுடன், தமிழக அரசு விழித்துக் கொண்டு செயல்பட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அதேபோல, நதி நீர் பிரச்னைகளை கண்காணித்து, உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகா ரிகள் கொண்ட ‘நதி நீர் பாதுகாப்பு கமிட்டி’ ஒன்றை அமைக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, அந்தப் பணியையும் உடனடியாக மேற்கொண்டு இதுபோன்ற சூழ்நிலைகளை தடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். இதனிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பணப்பட்டுவாடா செய்த புகாருக்காக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், "பணப்பட்டுவாடா செய்த முதல்வர் எடப்பாடி உள்ளிட்டோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து நீண்ட நாள்கள் ஆகியும், காவல்துறை இன்னும் வழக்குப் பதியவில்லை தேர்தல் ஆணையத்தின் உத்தரவை, மாநகர காவல் ஆணையர் நிறைவேற்ற தவறினால் தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்படும்" என்று கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img