தனது பதவிக்காலத்தில் இதுவரையில் 30 கருணை மனுக்களை நிராகரிப்பு செய்து உத்தரவிட்டுள்ளார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. இந்தியாவில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அந்த தண்டனையில் இருந்து தப்புவதற்கான இறுதிக்கட்ட முயற்சியாக ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. குற்றவாளிகள் செய்த குற்றத்தின் சூழ்நிலை மற்றும் அவர்களின் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு கருணை அளிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. இந்த வகையில் 2001 நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குரு, 2008 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குரு ஆகியோரின் கருணை மனுக் களை நிராகரித்தது உட்பட இதுவரை தனது பதவிக்காலத்தில் 30 கருணை மனுக்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிநிராகரித்துள்ளார். இந்த எண்ணிக்கை இதற்கு முன்னர் பதவிவகித்த இந்திய ஜனாதிபதிகளில் இருந்து முற்றிலும் மாறுகிறது. பிரணாப் முகர்ஜிக்கு முன்னர் பதவி வகித்த பிரதீபா பாட்டீல் தனது பதவிக்காலத்தில் மொத்தமாக மூன்று மனுக்களை மட்டுமே நிராகரித்து 34 கருணை மனுக்களுக்கு மன்னிப்பு அளித்து உத்தரவிட்டார். இதேபோல், அதற்கு முன்னர் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம், தன்னுடைய பதவிக் காலத்தில் இரண்டு மனுக்களை நிராகரித்து, ஒரு மனுவுக்கு மன்னிப்பு அளித்து, 14 மனுக்களை நிலுவையில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்