திருவண்ணாமலையில் பவழக்குன்று மலைப்பகுதியை ஆக்கிரமித்திருந்த நித்தியானந்தாவின் சீடர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாக வெளி யேற்றினர். திருவண்ணாமலையிலுள்ள அண்ணாமலையார் மலைமீது அமைந்துள்ளது பவழக்குன்று. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இந்தப் பகுதி உள்ளது. இங்கு நித்தியானந்தாவின் சீடர்கள் கீற்று கொட்டகை அமைத்து, சில படங்களுடன் வழிபாடு நடத்திவந்தனர். அங்குஆசிரமம் அமைக்கப்போவதாகவும் அவர்கள் கூறி வந்தனர். இதுகுறித்து திருவண்ணாமலையிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் அப்பகுதி மக்களும் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதையடுத்து இன்று கோட்டாட்சியரின் உத்தரவின் பேரில் அங்கு சென்ற காவல் துறையினர், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டனர். மேலும், அங்கிருந்த சாமி படங்களும், கீற்று கொட்டகையும் அகற்றப்பட்டது. அப்போது அங்கிருந்த பெண் சீடர்கள் மலையிலிருந்து கீழே இறங்க மறுத்ததால், அவர்கள் குண் டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து மீட்கப்பட்ட பவழக்குன்று மலைப்பகுதியில் வேலியமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்