டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடுபவர்கள் விஷமிகளா என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற் பட்ட கடைகள் அகற்றப்பட்டன. இந்தக் கடைகளை ஊருக்குள் திறப்பதற்கு தமிழக அரசு முயற்சி செய்துவருகிறது. இதற்கு எதிராக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பெரும்பாலும் பெண்களே போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். இதுதொடர்பான வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் கொண்ட அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக் கறிஞரிடம் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அப்போது நீதிபதி கிருபாகரன், 'டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள், சிறார்களை விஷமிகள் என்பதா? டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்களும், குழந்தைகளும் போராடுவதை ஊடகங்களில் நாங்கள் நேரடியாகப் பார்க் கிறோம். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்கள்மீது குற்றம் சுமத்த ஓர் எல்லை உண்டு' என எச்சரித்தார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்