சுவாதி கொலை வழக்கு படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வம் உள்பட மூன்று பேரைக் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி ஐ.டி பெண் பொறியாளர் சுவாதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை நடத்திய காவல்துறையினர், நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் தனது வீட்டில் பதுங்கியிருந்த ராம்குமார் என்பவரைக் கடந்த ஜூலை 1-ஆம் தேதி கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் ஜூலை 18-ஆம் தேதி மின் வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தநிலையில், இயக்குநர் ரமேஷ், 'சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் படத்தை எடுத்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தப் படத்துக்கு சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், 'சுவாதி கொலை வழக்கு' படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இயக்குநர் ரமேஷ் செல்வம், தயாரிப்பாளர் சுப்பையா, கதாசிரியர் ரவி ஆகியோர்மீது வழக்குப் பதிவுசெய்தனர். இந்தநிலையில், மூன்று பேரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், மூன்று பேரையும் கைது செய்யக்கூடாது என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்