இடிந்தகரை மீன்கள் ருசியாக இருக்கும் என்று ராதாபுரம் எம்எல்ஏ கூறியதால், அந்த மீன்களை சபாநாயகர் கேட்டதால் சட்டப்பேரவையில் கலகலப்பு ஏற்பட்டது. தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் உள்ளாட்சித்துறை மற்றும் மீன்வளத்துறை குறித்த மானியக்கோரிக்கை நடைபெற்றது. அப்போது, ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை பேசுகையில், நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் மீன் பதப்படுத்தும் பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் அவர் பேசுகையில், இடிந்தகரை மீன்கள் சுவையாக இருக்கும் என்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், இடிந்தகரை மீன்களை எம்எல்ஏ-க்களுக்கு அளிக்கலாமே என்றதும் சட்டப்பேரவை கலகலப்புடன் காணப் பட்டது. உடனே எழுந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீன்வனத்துறை மானிய கோரிக்கையின்போது மீன்கள் வழங்கப்படும் என பதில் அளித் தார். மேலும், இடிந்தகரையில் மீன் பதப்படுத்தும் பூங்கா அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். இதனிடையே, எம்எல்ஏ தங்கபாண்டியன் கேள்விக்குப் பதில் அளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ராஜபாளையத்தில் பாதாள சாக் கடைத் திட்டம் நிதி ஆதாரம் பெற்று விரைவில் செயல்படுத்தப்படும் என்றும், தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். மேலும், நிதி ஆதாரத்தை கருத்தில் கொண்டு படிப்படியாக பாதாள சாக்கடைகள் கட்டப்படும் என்று கூறிய அமைச்சர், பவானி ஆற்றில் கழிவுநீர் கலப் பதை தடுக்க கதவணைகளை கட்டும் பணி இந்தாண்டு தொடங்கப்படும் என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்