நீதிமன்றத் தடையை மீறி சென்னை திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோட்டில் கல்லூரி மாணவர்கள் 'பஸ் டே' கொண்டாடி வருகின்றனர். சென்னையில் 'பஸ் டே' கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி அவ்வப்போது 'பஸ் டே' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவல்லிக்கேணியில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் இன்று 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட் டுள் ளனர். பட்டாபிராம் - அண்ணா சதுக்கம் செல்லும் '27H' மாநகரப் பேருந்தில், மாணவர்கள் 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாரதி சாலை யிலிருந்து, மாநிலக் கல்லூரியை நோக்கி இந்தக் கொண்டாட்டம் நடந்து வருகிறது. சுமார் 50 மாணவர்கள் இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் இருசக்கர வாகனத்திலும் பல்வேறு மாணவர்கள், இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைப் போலீஸார் விரட்டி வருகின்றனர். கல்லூரி வளாகத்திலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'பஸ் டே'கொண்டாட உயர் நீதிமன்றம் மற்றும் காவல்துறை தடை விதித்துள்ளது. இதனால், மாணவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்