ஜெயலலிதாவுக்கான மருத்துவ செலவை அ.தி.மு.க. அம்மா அணியே ஏற்கும் என்று செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டது. அவருக்கு அளிக்கப் பட்ட சிகிச்சை குறித்து அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கமளித்திருந்தனர். ஆனால், சிகிச்சைக்கான செலவுத் தொகை குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்தச்சூழ்நிலையில் ஜெயலலிதாவுக்கான சிகிச்சைத் தொகையை அ.தி.மு.க.அம்மா அணியே ஏற்கும் என்று செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ செலவுக்கான தொகையை எங்கள் கட்சி நிதியில் இருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் ஆறு கோடி ரூபாய் காசோலையை வழங்குகிறோம். இந்த காசோலையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ் கரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர், விரைவில் அந்த காசோலையை அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கொடுக்கவுள்ளார்" என்றார். டி.டி.வி.தினகரனை எம்எல்ஏ-க்கள் சந்திப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, “டி.டி.வி.தினகரன், சிறந்த அரசியல் பண்பாளர். அவரால் கட்சிக்குள் எந்தப்பிளவும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு அவர் உறுதுணையாகவே உள்ளார். அவரை எம்எல்ஏ-க்கள் மரியாதை நிமித்தமாகவே சந்தித்துவருகின்றனர்" என்றார். இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. அம்மா அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஜெயலலிதாவுக்கான மருத்துவச் செலவை தமிழக அரசே ஏற்க வழிவகை உள்ளது. இருப்பினும், அதை நாங்கள் விரும்பவில்லை. இதனால், கட்சி நிதியிலிருந்து மருத்துவச் செலவை கொடுக்கிறோம். ஏற்கெனவே, ஜெயலலிதாவின் சொத்துக்காக அவரது அண்ணன் மகள் தீபாவும் தீபக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சொத்துக்கு மட்டும் சண்டைப் போடும் அவர்கள் சிகிச்சை செலவை செலுத்த ஏன் முன்வரவில்லை. அதோடு, நீதிமன்றத்தில் அபராத தொகையையும் செலுத்துவது தொடர்பாக அவர்கள் வாய்திறக்கவில்லை.தீபக் மட்டும், கடன் வாங்கி அபரா தத் தொகையை செலுத்துவதாக தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபடவில்லை. அதுபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவின் சிகிச்சை தொகை குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால், நாங்கள் அப்படியல்ல. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள், விசுவாசிகள். அ.தி.மு.க.வுக்காக அவர் செய்த தியாகத்துக்கு முன்னால் இந்த தொகை பெரியதல்ல. இருப்பினும் பிரிந்துகிடக்கும் அ.தி.மு.க. அணிகள் விரைவில் ஒன்றுசேரும்" என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்