ஆளும்கட்சி எம்எல்ஏ-க்கள் பணம் பெற்றதாக கூறப்படும் சிடி ஆதாரத்தை சட்டப்பேரவையில் காட்டிய பிறகும் இது குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுப்பதாக வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப்பேரவை கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே ஆளும் கட்சி எம்எம்ஏ சரவணன் குதிரை பேர வீடியோ விவகாரம் வெடித் தது. திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம், சாலை மறியல் என பரபரப்புடன் காணப்பட்டது தலைமைச் செயலகம்.இரண்டாவது நாளான நேற்று மீண்டும் இதே பிரச்னையை திமுக எழுப்பியது. சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டதால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இன்றும் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ஆளும் கட்சி எம்எல்ஏ-க்கள் பணம் பெற்றதாக கூறப்படும் சிடி ஆதாரத்தை சட்டப் பேரவையில் காட்டினேன். இது குறித்து பேச இரண்டு நாள்களாக அனுமதி மறுக்கப்படுகிறது. சபாநயாகர் கூறியபடி வீடியோ ஆதாரத்தை சட்டப் பேரவைக்கு கொண்டு வந்தேன். வீடியோ ஆதாரம் குறித்துப் பேசினால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. எம்எல்ஏ-க்கள் பணம் பெற்ற விவகாரம் தமிழகத்துக்கே மிகப்பெரிய அவமானம்" என்றார். பின்னர் பேசிய துரைமுருகன், வீடியோ விவகாரத்தில் அமைச்சரின் தலையீட்டால் சபாநாயகர் அந்தர்பல்டி அடிக்கிறார். சபாநாயகரின் முடிவில் அமைச் சர் ஜெயக்குமார் தலையிடுகிறார் என்று குற்றம்சாட்டினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்