சவுதி சவுதி பாலைவனத்தில் 24 ஆண்டுகள் சட்டவிரோதமாக தமிழர் ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார். கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்ட சவுதி அரே பியாவில் சட்டவிரோதமாக 24 ஆண்டுகள் தமிழர் ஒருவர் வாழ்ந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் ஞான பிரகாசம் ராஜமரியான். 1994 ஆம் ஆண்டு சவுதிக்கு சென்ற இவர் ஹெயில் மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் அங்கு அவருக்கு சரியான ஊதியம் வழங்கப்படாததால் அங்கிருந்து தப்பித்து சவுதியிலுள்ள பாலைவன பகுதியில் சட்டவிரோதமாக வசிக்க தொடங்கியுள்ளார் ராஜமரியான். ராஜமரியான் 1994 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒருமுறை கூட தமிழகத்துக்கு திரும்பவில்லை. இருப்பினும் தன் குடும்பத்துக்குத் தொடர்ந்து பணம் அனுப்பி வந்துள்ளார். தற்போது, ஞான பிரகாசத்துக்கு 52 வயது. அவர் சமூக ஆர்வலர் ஒருவரின் உதவியுடன் தற்போது தமிழகம் திரும்பவுள்ளார். இவ்வாறு செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் நடிகர் தனுஷ் நடித்த மரியான் படத்தை நினைவுபடுத்துகிறது. தனுஷை விட ஞானபிரகாசம் நிஜ மரியானாக வாழ்ந்துள்ளார். இத னிடையே ஞான பிரகாசம் குறித்து தமிழக அரசோ, மத்திய வெளியுறவு அமைச்சகமோ எந்தத் தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்