சென்னை தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-து விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து பேசியதாவது:- 2011-12 முதல் 2015-16 முடிய ஐந்து ஆண்டுகளில் சட்டமன்ற விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட மொத்தம் 879 அறி விப்புகளில், 872 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 அறிவிப்புகளுக்கான ஆயத்தப்பணிகள் முடிவடைந்த பின்னர் அர சாணை வெளியிடப்படும். 557 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 315 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகளில் பெரும்பாலானவை முடிவுறும் தருவாயில் உள்ளன. இதில் 7 அறிவிப்புகளுக்கான திட்டங்களுக்கு அர சாணை வெளியிடப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட காரணத்தினாலும், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாலும் முன்னேற்றம் இல் லாமல் நிலுவையில் இருக்கின்றன. 2016-17 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் அவர்கள் 175 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். 167 அரசாணைகள் வெளியிடப் பட்டு, அப்பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டு, 20 பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 147 பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. 8 அறிவிப்புகளுக்கான திட்டப்பணிகள் தொடங்குவதற்கான ஆயத்தபணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவிப்பிற்கான திட்டங்கள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன. 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் குறித்து அந்தந்த தொகுதியில் உள்ள எம்எல்ஏக்கள் கேட்டால் விளக்கம் அளிக்க தயார். விதி 110ன் கீழ் மறைந்த முத லமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு தொடர்ந்து நிறைவேற்றும். இவ்வாறு அவர் கூறினார்
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்