விஜய்மல்லையாவின் கிங்ஃபிசர்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் 14 வங்கிகளுக்கு ரூ.4,300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான இந்திய ஸ்டேட் வங்கியின் உள்ளக ஆய்வு ஆவணம் ஒன்றை மேற்கோள்காட்டி, எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி இதழ் இத்தகவலை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்குக் கடன்கொடுத்து இழப்பைச் சந்தித்துள்ள 14 வங்கிகளில் 13 வங்கிகள் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகும். இதில் இந்திய ஸ்டேட் வங்கியானது அதிகபட்சமாக 900 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. மும்பையில் உள்ள மிட் கார்ப்பரேட் குரூப் முதன்மைப் பொதுமேலாளர் சுப்பண்ணாவின் தலைமையிலான குழு, இந்த இழப்பீட்டைக் கணக்கிட்டு, கடந்த டிசம்பர் 7ஆம் தேதியன்று, பெருந்தொகை மோசடிகளைக் கண்காணிக்கும் வங்கியின் சிறப்புக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. முன்னதாக டிசம்பரில் நடக்கவிருந்த இந்தக் குழுவின் கூட்டமானது, இரண்டு மாதங்கள் தாமதமாக கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெற்றது. கிங்ஃபிசர்ஸ் நிறுவனத்துக்கு 2009 முதல் 2012-ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் 17 வங்கிகள் கடனை வழங்கியிருந்தன. அந்த சமயத்தில்தான் அந்த நிறுவனமானது மோசமானநிலைக்குப் போகத் தொடங்கியது; வாங்கிய கடனைத் திரும்பச்செலுத்தமுடியாத நிலையை அடைந்தது. இந்நிலையில் கிங்ஃபிசர் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த 14 வங்கிகள் ஒன்றாக, அந்த நிறுவனத்துடனேயே ஒப்பந்தம் செய்துகொண்டன. இந்தக் கடன் தீர்ப்பு உடன் பாட்டில்,விஜய்மல்லையாவே தனிநபர் ஜவாப்தாரியாகவும் கார்ப்பரேட் ஜவாப்தாரியாக அவரின் யுனைடட் பிரிவெரிஸ் மதுபான நிறுவனமும் குறிப்பிடப் பட்டது. இழப்பைச் சந்தித்துள்ள வங்கிகள் பட்டியலில், இரண்டாவது இடத்தில் ஐடிபிஐ வங்கியும், பஞ்சாப் தேசிய வங்கி, பேங்க் ஆஃ இண்டியா, பேங்க் ஆஃப் பரோடா, சென்ட்ரல் பேங்க் ஆஃ இண்டியா, யுனைடட் பேங்க் ஆஃப் இண்டியா, யுசிஓ வங்கி, கார்ப்பரேசன் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, ஃஃபெடரல் வங்கி, பஞ்சாப் சிந்து வங்கி, ஆக்சிஸ் வங்கி என இழப்புத்தொகை அடிப்படையில் வரிசையாக இடம்பெற்றுள்ளன. 14 வங்கிக ளுக்கும் சேர்த்து ரூ.4,300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என இந்திய ஸ்டேட் வங்கியின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்